Diet – உணவுமுறை (LCHF) – பாகம் 1

admin | 16 Sep 2020

முதலில் டயட் என்றால் ஏதோ பட்டினி இருக்கப்போகதாகவோ, உணவே இல்லாமல் இருக்கப்போகதாகவோ நினைத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்த அனைவருக்கும் வணக்கங்கள்

டயட் என்பது உண்ணாமல் இருப்பது இல்லை சரியான உணவை தேர்ந்தெடுத்து உண்பதே டயட் என்று அழைக்கிறோம். சரி அப்போ இவ்ளோ நாள் தப்பான உணவையா சாப்பிட்டேன் என்று கேட்பவர்களுக்கு உங்கள் அடிவயிற்று கொழுப்பே ஆம் என்று சிரித்துக் கொண்டே பதில் சொல்லும்

இதுவரை செய்தது

நீங்கள் இணையத்தில் தேடினால் ஆயிரக்கணக்கான டயட்டுகள் உங்களுக்கு கிடைக்கும்,அதில் ஏதோ ஒரு டயட்டை ஆர்வத்தில் தொடங்கி பாதியில் விட்டு மீண்டும் உடல் எடை கூடி இந்த குழுவில் வந்து இணைந்திருப்பீர்கள்

ஏன் உங்களின் அத்தனை டயட் முயற்சிகளும் தோற்றது என யோசித்தது உண்டா?

முதலில் டயட் என்பது வெறும் எடைக்குறைப்பு முயற்சியாக இல்லாமல் வாழ்வியல் மாற்றமாக இருக்க வேண்டும் (life style change)

அப்படி வாழ்க்கை முழுக்க ஒரு உணவ பழக்கம் இருக்க வேண்டும் என்றால் அது சலிப்புட்டாத வகையில் சுவையாகவும் அதே வகையில் பசி எடுக்காத வகையிலும் இருக்க வேண்டும்

இல்லையென்றால் அடிக்கடி cheating அல்லது டயட் முறிவு (diet brake) ஏற்படும்!

இதற்கான தீர்வுகளையும்,
வழிகாட்டுதலகளையும் தருவதற்கே இந்த பக்கம் உங்களுக்காக உதவப் போகிறது.

இனி செய்யப்போவது

இவ்வளவுநாள் நம் உடல் எடை கூட ஒரே வில்லன்தான் காரணம் அவன் பெயர் கார்போஹைட்ரேட்
(carbohydrates) அவனுக்கு சக்கரை,இனிப்பு,மாவுச்சத்து என்று பல பெயர்களில் அழைக்கிறோம்

சரி வில்லன் இருந்தால் HERO இருக்க வேண்டுமே அவர்தான் கொழுப்பு .

இத்தனை நாள் கார்போஹைட்ரேட்டால் இயங்கிய நம் உடலை கொழுப்பால் இயக்கப்போகிறோம் அவ்வளவுதான்

அதாவது நீராவியால் ஓடிய ஒரு வாகனம் இனி டீசலால் இயங்குவது போல எடுக்கும் எரிபொருளை மட்டும் மாற்றப்போகிறோம்.
இதனால் இதயம் அடைத்துவிடுமா, மூளை வெடித்து விடுமா? என்றால் அதற்கான பதில்

இதயமே நான்கு அறைகளால் ஆன ஒரு கொழுப்புதுண்டுதான் ஆகவே இதயத்திற்கு நண்பனான கொழுப்பை கொடுப்போம்

நாம் கார்ப்பையும் முழுவதும் தவிர்க்க போவது இல்லை அதன் கிராம் அளவுகளை தேவைக்கு தகுந்த அளவில் மாற்றி எடுத்து உணவை தொடரப்போகிறோம்

பயன்கள்

இப்படி கார்போஹைட்ரேட் அளவுகளை குறைக்கும் போது அது நம் உடலுக்கு எடைக்குறைப்பையும் தாண்டி,

 • ரத்த அழுத்தம்
 • மூச்சு வாங்குதல்
 • முதுகு வலி
 • மாதவிடாய் பிரச்சனைகள்
 • மன அழுத்தம்
 • PCOS/PCOD
 • ஹார்மோன்
 • பிரச்சனைகள்
 • தைராய்டு
 • தூக்கமின்மை
 • ஆண்மைகுறைவு

போன்ற பல உடல்நல குறைபாடுகளையும் சரி செய்கிறது மேலும் உணவில் நல்ல கொழுப்பை உண்பதால் தோலின் நிறம் கூடும். எந்த வழிமுறைகள் என்பதை இனி பார்க்கலாம்

1. கார்ப்( 0 -50 கிராம் )

நீங்கள் இந்த உணவுமுறையை எடுத்தால் எடையிழப்பு மிக வேகமாக இருக்கும்,இன்றைய காலத்தில் பிரபலமான பேலியோ,கீட்டோ போன்ற டயட்டுகள் இந்த முறையின் கீழ் வரும் அன்றாட உணவில் கார்போஹைட்ரேட் 50 கிராம் அளவிற்குள் இருக்கும் படி பார்த்துக்கொள்ள வேண்டும்,அந்த கார்ப் காய்கறிகள்,பால் வழியாக மட்டுமே எடுக்கலாம்,பெரும்பான்மையான உணவு முட்டை,இறைச்சி போன்ற கொழுப்பின் மூலமும் ,புரதத்தின் மூலமும் எடுப்பதால் எடையிழப்பு மிக தீவிரமாக இருக்கும்.

2. கார்ப் (50 -100 கிராம்)

இந்த முறை LCHF (low carb high fat ) என்று அழைக்கப்படுகிறது,
இதில் அன்றாட உணவில் கார்ப் சதவீதம் ஐம்பதிலிருந்து நூறு கிராம் வரை எடுக்கலாம்,இதிலும் எடையிழப்பு நன்றாக இருக்கும், சில வகை பழங்கள்,பால்,நட்ஸ் வகைகள் வழியாக இந்த கார்பை எடுக்கலாம், பெரும்பான்மை உணவை கொழுப்பின் மூலம் எடுப்பதால் உடல் இயங்க கொழுப்பு பயன்படுத்தப்படும்,

இப்படி கொழுப்பை அதிகமாக எடுக்கும் போது கொழுப்பில் சர்க்கரை இல்லாததால் இரத்தத்தில் சர்க்கரை அளவுகள் அதிகரிக்காது இதனால்
இன்சுலின் சுரப்பு கட்டுப்படுத்தப்படும்

இந்நிலையில் உடல்
உடல் தன் இயக்கத்திற்கு நம் உடலில் உள்ள அடிவயிறு,
தொடைப்பகுதி போன்ற தேங்கிய கொழுப்புகளையே எரிக்கத்தொடங்கி எடை குறையத்தொடங்கும்

3.கார்ப் (100-150 கிராம்)

நீங்கள் போதிய எடையில் இருக்கும் நிலையில் இந்த முறையை பின்பற்றலாம் இந்த டயட்டால் உங்கள் எடை கூடாமல் லோ கார்ப் மெயின்டெய்ன் ஆகும் (Low carb balance diet) இந்த முறையில் நீங்கள் எடையை குறைக்க மிக அதிகமான உடற்பயிற்சியை செய்ய வேண்டும் இந்த டயட் லோ கார்ப் பேலன்ஸ் டயட் (low carb balance diet) என்று அழைக்கப்படுகிறது

இந்து மூன்று உணவு முறைகளில் ஏதேனும் ஒரு முறையை உங்கள் உடல் எடையை மனதில் வைத்துக்கொண்டு தேர்வு செய்து கொள்ளவும் குழுவின் வழிகாட்டுதலின்படி அதனை கடைபிடித்து நடந்து ஒரு ஆரோக்கியமான கூட்டமைப்பாக இணைந்து பயணிப்போம். நன்றி.


Related Posts

பேலியோ டயட்

admin |

எடை இழப்புக்காக மக்கள் ஏராளமான டயட் முறைகளை பின்பற்றுவது உண்டு. அவற்றில் ஒரு […]

Continue reading

முட்டை

admin |

முட்டையில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. வளரும் குழந்தைகளுக்கு முட்டை ஒரு ஆரோக்கியமான […]

Continue reading

Diet – உணவுமுறை – பாகம் 2

admin |

உணவு முறைக்காக(diet) எந்த உணவுகளை சேர்க்க போகிறோம், எந்த உணவுகளை ம(று)றக்க போகிறோம் என்று பார்க்கலாம்

Continue reading

Low carb foods

admin |

A low-carb diet means that you eat fewer carbohydrates and […]

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *