Diet – உணவுமுறை – பாகம் 2

admin | 18 Sep 2020

உணவியல்

சென்ற பதிவில் உணவில் கார்ப்பை(carbohydrate)கட்டுப்படுத்தி கிடைக்கும் நன்மைகளை பார்த்தோம் இனி இந்த உணவு முறைக்காக(diet) எந்த உணவுகளை சேர்க்க போகிறோம், எந்த உணவுகளை ம(று)றக்க போகிறோம் என்று பார்க்கலாம்

தவிர்க்க வேண்டிய பட்டியலில் குறிப்பிடும் சில உணவுகளில் இந்து சத்து இருக்கிறதே? இது நல்லதுதானே? இதை ஏன் சாப்பிடக்கூடாது என கேள்விகள் எழும்

அதற்கான பதில்
இந்த உணவு முறையில் கார்ப் அளவுகளை குறைத்து இன்சுலின் சுரப்பை கட்டு்ப்படுத்துவதற்காக கொடுக்கப்படுகிறது நாங்கள் தவிர்க்க சொன்ன சில உணவு பொருட்களில் நிறைய சத்துகள் இருந்தாலும் அதில் கார்போஹைட்ரேட் அதிகமாக இருப்பதால் தவிர்க்க சொல்கிறோம் அதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்

மறக்க வேண்டியவை

சர்க்கரை

(இனிப்புகள் என்றால் எல்லா வகையான இனிப்புகளும் நாட்டு சர்க்கரை,கரும்பு சர்க்கரை,பனை வெல்லம்,கருப்பட்டி என் அனைத்தும் தவிர்க்க வேண்டும் )

  • அரிசி
  • கோதுமை
  • மைதா
  • சோயா
  • கிழங்குகள்
  • தானியங்கள்
  • மக்காசோளம்
  • சுகர் free இனிப்புகள்
  • ஹார்லிக்ஸ்,பூஸ்ட் போன்ற பொருட்கள்
  • சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள்
  • பேக்கரி உணவுகள்
  • நூடுல்ஸ்
  • வேக உணவுகள்( fast food)
  • சுண்டல்
  • பயறுவகைகள்
  • பழங்கள்
  • பீன்ஸ்
  • வாழைக்காய்
  • பருப்பு வகைகள்
  • புகைப்பிடிப்பது
  • மது அருந்துவது

உண்ணப்போகும் உணவுகள்

  • அனைத்து வகையான இறைச்சி
  • முட்டை
  • பாதம்
  • பன்னீர்
  • வெண்ணெய்
  • காய்கறிகள்
  • கீரைகள்
  • தேங்காய்

சமையல் எண்ணெயாக நெய், செக்கில் ஆட்டி தேங்காய் எண்ணெய்,வெண்ணெய்

இந்த உணவுமுறையில் உங்களுக்கு கிடைக்கும் பலன்கள் ஏராளம் ஆகவே நாவின் ஆசையா ?இல்லை உடலின் நலமா ? என்ற கேள்வி நம்மை நாமே கேட்போம் அதற்கான பதில் உடலின் நலமாக இருக்கும் ஆகவே புதிய வாழ்வியல் முறைக்கு (Life style change) தயாராக இருப்போம். நன்றி.


Related Posts

பேலியோ டயட்

admin |

எடை இழப்புக்காக மக்கள் ஏராளமான டயட் முறைகளை பின்பற்றுவது உண்டு. அவற்றில் ஒரு […]

Continue reading

முட்டை

admin |

முட்டையில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. வளரும் குழந்தைகளுக்கு முட்டை ஒரு ஆரோக்கியமான […]

Continue reading

Diet – உணவுமுறை (LCHF) – பாகம் 1

admin |

டயட் என்பது உண்ணாமல் இருப்பது இல்லை சரியான உணவை தேர்ந்தெடுத்து உண்பதே டயட்

Continue reading

Low carb foods

admin |

A low-carb diet means that you eat fewer carbohydrates and […]

Continue reading

One thought on "Diet – உணவுமுறை – பாகம் 2"

  1. Nirmal says:

    Hi bro, chappathi is bad to weight loss

Leave a Reply to Nirmal Cancel reply

Your email address will not be published. Required fields are marked *